"நானே பலி ஆடு ஆகிறேன்.." இன்ஸ்டாவில் ஏ.ஆர்.ரகுமான் வேதனை.! 

AR Rah

மக்கள் விழித்துக்கொள்ள நானே பலி ஆடு ஆகிறேன் என்று நேற்று நடந்த "மறக்குமா நெஞ்சம்" நிகழ்ச்சியின் கசப்பான அனுபவம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வேதனை தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

"மறக்குமா நெஞ்சம்"

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையிலுள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அளவுக்கு அதிகமான மக்கள் சென்றனர். இந்த இசை நிகழ்ச்சியின் பங்கேற்பதற்கான கட்டணமாக தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என ரூ. 2000 முதல் ரூ.15,000 வரை டிக்கெட் வாங்கி இசைக் கச்சேரியை திரளாக பார்க்கச் சென்றனர் மக்கள். 

ரசிகர்கள் குமுறல்

அளவுக்கு அதிகமாக மக்கள் கூடியதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் காரணமாக இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் ரசிகர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். அதிக ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலால் பெரும்பாலான ரசிகர்கள் திரும்பிச் சென்றனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கவில்லை, ஒதுக்கப்பட்ட இருக்கைகளைவிட அதிகமாக டிக்கெட்டுகளை விற்றுருப்பதாக மக்கள் கொந்தளித்து பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராகின. 

டிக்கெட் நகலை அனுப்ப மின்னஞ்சல்  

இந்தநிலையில், இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து, நெரிசல் காரணமாக இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் இன்னல்களுக்கு ஆளான ரசிகர்களுக்கு ரகுமான் உறுதி அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் திரும்பிச் சென்றவர்கள் டிக்கெட் நகலை http://arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் அறிவுறுத்தியிருக்கிறார். மேலும்,  டிக்கெட் நகல் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் உறுதி அளித்திருக்கிறார். 

"நானே பலி ஆடு ஆகிறேன்.."

இதையடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் வேதனை தெரிவித்திருக்கிறார். அதில் குறிப்பிட்ட ஏ,ஆர்.ரகுமான், மக்கள் விழித்துக்கொள்ள நானே பலி ஆடு ஆகிறேன் என்று வேதனை தெரிவித்திருக்கிறார். அடுத்ததாக, சென்னையில் உலகத்தரமான இசை நிகழ்ச்சி நடக்க வேண்டும். அதில், போக்குவரத்து மேலாண்மை, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், விதிகளை பின்பற்றுவது குறித்தும், குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.