நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்.. பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்.! 

Sonia Le

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் வரும் செப்-18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அந்த சிறப்புக்கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியா பெயரை 'பாரத்' என பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்களை மத்திய அரசு நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில்தான், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருக்கிறார். 

அவர் எழுதியுள்ள கடிதத்தில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும். சிறப்புக்கூட்டத்தின் விவாதப்பொருள் பட்டியல் தரவில்லை, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம், விவசாயிகள் பிரச்னை குறித்து சிறப்புக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  

மேலும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை குறித்தும் பேச வேண்டும் எனவும், சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.