10th, 11th Results Date 2023

SSLC, +1 மாணவர்களே ரெடியா.. இதோ உங்களுக்கான ரிசல்ட் தேதி அறிவிப்பு.!

result

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20, வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர். மேலும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் இந்தக் காலக்கட்டத்தில் நடத்தப்பட்டன. இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

வருகிற வெள்ளிக்கிழமை..

இந்தநிலையில், 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவு வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வருகிற 19-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு கட்டடத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார். வரும் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு காலை 10 மணிக்கும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

இணைய முகவரி

தேர்வு முடிவுகள் அவர்களின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இணையத்தில் சென்று பார்ப்பதற்கும் முகவரியை வெளியிட்டிருக்கிறார்கள். http://www.tnresults.nic.in என்ற முகவரியிலும் http://www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பானது தற்போது வெளியாகி இருக்கிறது. 

ஒரு வாரத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்

மேலும், தேர்வு முடிவில் Fail ஆகும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் துணைத்தேர்வுகள் நடைபெறும் என்பதை அன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவிப்பார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்திற்குள் போலி மதிப்பெண் சான்றிதழ் அவரவர் பள்ளியில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.