தமிழக வேளாண் பட்ஜெட் - 2023-2024

vee

2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இன்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

* நீர்நிலைகளை தூர்வாரியதால் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது - அமைச்சர் பன்னீர் செல்வம்.

* 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

* 1,695 கோடி காப்பீடு மானியமாக 6 லட்சம் விவசாயிகளுக்கு மேல் வழங்கப்பட்டது.

* 2,064 கிராமங்களில் விவசாயிகளை உள்ளடக்கிய வேளாண் முன்னேற்ற குழுக்கள் அமைக்கப்படும்.

* சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து பயிற்சிகள் அளிக்கப்படும்.

* மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை போலவும் தங்க சம்பா உண்டால் தங்கமாகவும் இருக்கலாம் - அமைச்சர்.

* மக்களுக்கு சிறுதானியங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு.

* பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை.

* ரேஷன் கடைகளில் கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை.

* விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருவதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் - அமைச்சர்.

* கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு.

* தானியங்கள் மட்டுமல்ல; காய்கறிகள், பழங்களை போதிய அளவில் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம். 

* விவசாயிகளுக்கு இதுவரை 123.60 கோடி இடுபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

* வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு 230 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கான 5 லட்சம் பரிசு சிறுதானிய விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

* 2020-2021-ல் ஒப்பிடுகையில் 2021-2022-ல் வேளாண் உற்பத்தி அதிகரிப்பு - எம்ஆர்கே. பன்னீர்செல்வம்.

* ஆர்கானிக் எனப்படும் அங்கக வேளாண் திட்டத்துக்கு பட்ஜெட்டில் 26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
.
* மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு .

* வேளாண் மாணவர்கள் 200 பேருக்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை.

* நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு 24 கோடி மானியம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* நம்மாழ்வார் பெயரில் விவசாயிகளுக்கு விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

* அங்கக வேளாண்மையில் சிறப்பாக செயல்படுவோர்க்கு விருது வழங்கப்படும்.

* ஒரு லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடிக்கு 14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* 60,000 சிறு,குறு நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு 15 கோடியில் வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம்.

* ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களை சேர்ந்த சிறு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க 11 கோடி நிதி ஒதுக்கீடு.

* அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேர் பரப்பில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்.

* 385 வட்டார வளர்ச்சி மையங்களில் விவசாயிகளுக்கான சேவைகள் வழங்க வேளாண் மின்னனு உதவி மையம் அமைக்கப்படும்.

* நீலகிரியில் அங்கக வேளாண்மைக்கு 5 கோடி ஒதுக்கீடு.

* ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20% மானியம் வழங்கப்படும்.

* சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை விவசாயிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு தொடங்கப்படும்.

* பயறு சாகுபடி பரப்பளவை அதிகரிக்க மத்திய அரசு நிதியுதவியுடன் 30 கோடியில் திட்டம்.

* ஆடு, மாடு வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி Grains என்ற இணையதளம் அறிமுகம்.

* பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் ஊக்குவிக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு.

* சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க 33 கோடி ஒதுக்கீடு .

* எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை ஊக்குவிக்க 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம்.

* ஆடு, மாடு, தேனீ உள்ளிட்டவற்றை வளர்க்கும் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணம் 10,000 மானிய தொகை அறிவிக்கப்படும்.

* தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற ரூ.20 கோடி .
.
* தென்னை வளர்ச்சி மேம்பாடு என்ற புதிய திட்டம் அறிமுகம்.

* குட்டை, நெட்டை ரக தென்னங்கன்று உற்பத்தியை அதிகரிக்க கன்னியாகுமரி, விருதுநகரில் உள்ள மையங்கள் மூலம் நடவடிக்கை.

* நூற்பாலைக்கு தேவையான பங்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் 12 கோடியில் பருத்தி இயக்கம்.

* பயிர் சாகுபடி சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள  வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானிகள் நியமிக்கப்படுவர்.

* பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை பகிர கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.

* 3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்.

* வேளாண் விரிவாக்க அலுவலர் கிராம அளவில் வேளாண் பணிகளை ஒருங்கிணைப்பார்.

* கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்.

* கோவை மாவட்டத்தில் கறிவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 2.5 கோடி ஒதுக்கீடு.

* கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

* சேலம், அமராவதி சர்க்கரை ஆலைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட உரம் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

* நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

* மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் முறை கற்றுத்தரப்படும்.

* மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை கற்றுத்தர ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.

* 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை 2,500 ஹெக்டேராக உயர்த்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு.

* பூச்சிகள் பற்றிய புரிதலை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலையில் உள்ள அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்.

* முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 ஹெக்டேர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 150 ஒழுங்குமுறை விற்பனை கிடங்கு, 25 குளிர்பதன கிடங்குகளில் மின்னனு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறை அமல்படுத்தப்படும்.

* தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட 130 கோடி மதிப்பில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்.

* சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 100 ஊக்கத்தொகை; பொது ரகத்திற்கு 75 ஊக்கத்தொகை.

* அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர்ரோஜா உள்ளிட்டவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

* சாத்தூர் வெள்ளரி, வீரமாங்குடி அச்சு வெல்லம், விளாத்திகுளம் மிளகாய் உள்ளிட்டவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.

* நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 14,000 கோடி கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நடப்பாண்டில் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அதிக வரத்துள்ள 100 விற்பனை கூடங்களில் 50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிப்பு.

* தூத்துக்குடி கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ஒதுக்கீடு.

* உழவர் சந்தைக்கு வரும் உழவர்களுக்கு சிற்றுண்டி, மூலிகை சூப் வழங்க நடவடிக்கை.

* அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் சிறுதானிய உணவக சிற்றுண்டி நிலையம் அமைக்கப்படும்.

* முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க 11 கோடி ஒதுக்கீடு.

* குளிர்கால காய்கறி சாகுபடிக்கு 2.5 கோடி மானியமாக வழங்கப்படும்.

* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 6,536 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* கூடுதலாக 550 ஹெக்டேரில் முந்திரி சாகுபடி அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

* மதுரை மல்லிகை விவசாயத்தை கற்றுத் தர 7 கோடி நிதி ஒதுக்கீடு.

* தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க 19 கோடி ஒதுக்கீடு.

* வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க 29 கோடி ஒதுக்கீடு.

* பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா செல்ல ரூ.1 கோடி ஒதுக்கீடு.

* முதற்கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

* காவிரி டெல்டா பகுதியில் திருச்சி - நாகை இடையே வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்க 1,000 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் பல்கலை.க்கு 100 கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும்.

* ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடியில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலம்.

* உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள், வட்டார புத்தொழில் மையம் தொடங்க ஊக்குவிப்பு.

* இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள விவசாயிகளுக்கு அயல்நாட்டில் பயிற்சி அளிக்கப்படும்.

* வெளிநாட்டு வேளாண் முறையை அறிந்து நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் பயிற்சி பெற 3 கோடி ஒதுக்கீடு.

* பனை சாகுபடியை ஊக்குவித்து பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2 கோடி ஒதுக்கீடு.

* விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு.

* வேளாண்மைத்துறைக்கு நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் மொத்தம் ரூ. 38,904 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.