காப்பு காடுகளின் வழியே குவாரிகள் இயங்கலாம் - தமிழ்நாடு அரசு 

tamilnadu govt

தமிழக அரசுக்கு வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில், வனப்பகுதியில் அமைந்துள்ள சுரங்கங்களுக்கு அண்மையில் தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து சுரங்க ஒப்பந்ததாரர்கள் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்க விடுத்து வந்தனர். இதனையடுத்து முடிவை மறு பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் எல்லையிலிருந்து 1 கி.மீ. சுற்றளவில் சுரங்கம் மற்றும் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. 

அரசின் மற்றொரு தடை தொடர்கிறது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசின் வருவாய், குவாரி குத்தகை எடுத்திருப்போரின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தேசிய பூங்காக்கள் வனவிலங்கு சரணாலயங்கள். புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களின் எல்லையிலிருந்து 1 கி.மீ தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட தமிழக அரசு விதித்திருந்த தடை தொடர்கிறது.