ஆதார் போன்று தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை 

tamilnadu ID

தமிழ்நாட்டு மக்களுக்கு makkal ID 

ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் மத்திய அரசு ஆதார் அட்டைகளை வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுதளம் ஒன்று தமிழ்நாட்டில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டு மக்களுக்கு என 10 முதல் 12 இலக்கங்களில் makkal ID என்ற பெயரில் அடையாள அட்டையை உருவாக்க அரசு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்திய அரசுக்கு ஆதார் அடையாள அட்டைப் போன்று தமிழக மக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. இது தொடர்பான தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மேலும், இந்த தரவுதளத்தை உருவாக்க  மென்பொறியியல் நிறுவனங்களிடம் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதார் போல தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை

இதன்மூலமாக தமிழ்நாட்டில் வசிப்பவர்களும் தமிழ்நாட்டில் திட்டங்களால் பயன்பெறக் கூடிய பயனாளர்களின் தரவுகளும் விவரங்களும் பதியப்பட உள்ளது. ஒவ்வொரு துறையிலும் பயனாளர்கள் விவரங்கள் சேமிக்கப்பட்டு வரும் நிலையில், இவை அனைத்தும் இனி ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தகுந்த வசதிகளுடன் கூடிய தரவுதளத்தை தமிழக அரசு உருவாக்க உள்ளது. 

பயனாளர்களின் தரவுகள் பதிவேற்றம்

இன்னும்  ஒரு சில மாதங்களில் மென்பொறியியல் நிறுவனங்கள் மக்கள் ஐடி தரவு தளத்தை உருவாக்க உள்ளதாகவும், இதன் அடுத்தகட்டமாக இந்த தரவு தளம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு எளிதில் சென்று சேருவதை உறுதி செய்யும்படி இத்திட்டம் இருக்கும் எனவும், இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  

தமிழகத்தின் தனி அடையாள அட்டையுடன் சேர்த்து ஒவ்வொருவரின் விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது.