தளபதி-67 படத்தின் டைட்டில் அறிவிப்பு.! 

LEO

நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடிக்கும் தளபதி 67 படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. 

வாரிசு

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பு நடிப்பில், தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜயை வைத்து படம் இயக்குகிறார் என்ற செய்தி பரவியது. இதனால் லோகேஷ் கனகராஜிடம் விஜய் ரசிகர்கல் தளபதி67 குறித்து அப்டேட் கேட்டனர். ஆனால் வாரிசு திரைப்படம் வெளியாகும் வரை தளபதி 67 குறித்து லோகேஷ் கனகராஜ் எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. மேலும் வாரிசு திரைப்படம் வெளியான பிறகு, இனிமேல் தொடர்ந்து தளபதி 67 குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வரும் தெரிவித்தார். 

தளபதி 67 படக்குழு

இந்நிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டியோ வெளியிட்டது. இதில் நடிகை த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், நடிகர் அர்ஜூன், உள்ளிட்ட பிரபலங்கள் தளபதி 67 படத்தில் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதைப்போல, லோகேஷ் கனகராஜின் டெக்னிக்கான LCU ஸ்டைலில், கைதி மற்றும் விக்ரம் படத்தில் நடித்த காதாபாத்திரங்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

லியோ

தளபதி 67 படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் வெளியிடப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வெளியான ப்ரோமோவில் தளபதி 67 படத்தின் பெயர் ‘லியோ’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சாக்லேட் தயாரிப்பதுபோலவும், பல கார்களில் தீவிரவாதிகள் அவர் இருக்கும் இடத்தை நோக்கி வருவதுபோலவும் ப்ரோமோ தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த திரைப்படம் தீவிரவாதிகளையும், போதைப் பொருளையும் மையப்படுத்திய கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.