சத்தமில்லாமல் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிய நடிகை..! 

Nayanthara and Samantha

தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி மற்றும் இளம் நடிகளை சத்தமில்லாமல் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா லெக்சுமி. 

தமிழில் நயன்தாரா, திரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், வரலெட்சுமி சரத்குமார் என முன்னணி நடிகள் மற்றும் சாய் பல்லவி, பிரியா பவானி சங்கர், இந்துஜா ரவிச்சந்திரன், பிரியா ஆனந்த், வாணி போஜன், மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன், ரெஜினா கஸண்ட்ரா, அதுல்யா ரவி, காயத்ரி சங்கர், ஆண்டிரியா ஜெரேமியா, ரம்யா பாண்டியன் போன்ற பல இளம் நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் யாருமே செய்யாத ஒன்றை நடிகை ஐஸ்வர்யா லெக்சுமி இந்த 2022ம் ஆண்டில் செய்துள்ளார். 

மார்க்கெட் சரியாமல் காப்பாற்றும் நடிகைகள்

முன்னணி நடிகைகள், இளம் நடிகைகள் மற்றும் புதுமுக நடிகைகள் என அனைவரும் தங்களுக்கு மார்க்கெட் இருக்கும்போதே, வாய்ப்பு கிடைக்கும் அனைத்து படங்களிலும் நடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிக படங்களில் நடிப்பது உண்டு. இது அவர்களின் மார்க்கெட்டை உயர்த்த வழிவகுக்கும், ஆனால் பல நேரங்களில் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடித்து வந்த வேகத்தில் காணாமல் போன நடிகைகளும் உண்டு. நடிகைகள் நயன் தாரா, திரிஷா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் வரலெட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் மட்டுமே தொடக்கத்தில் ஹீரோவுக்கு ஜோடியா நடித்து பின்னர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தங்கள் மார்க்கெட் சரியாமல் பார்த்துவருகின்றனர். 

அனைத்து நடிகைகளும் அவுட்

இந்நிலையில் நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்னும் மலையாள படத்தில் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகமாகி, ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா லெக்சுமியே, அனைத்து நடிகைகளையும் பின்னுக்குத்தள்ளி, இந்த ஆண்டின் டாப் நடிகையாக உள்ளார். ஐஸ்வர்யா லெக்சுமி அப்படி என்ன செய்துவிட்டார் என்று கேட்பவர்களுக்கு, இந்த ஆண்டு மட்டும் அவர் நடித்த ஐந்து தமிழ் படங்கள், இரண்டு மலையாளப் படங்கள் மற்றும் இரண்டு தெலுங்கு படங்கள் மொத்தம் 9 படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓர் ஆண்டில் அதிக திரைப்படங்கள் வெளியாக நடிகைகள் பட்டியலில் சத்தமில்லாமல் முதலிடத்தை பிடித்துள்ளார் ஐஸ்வர்யா லெக்சுமி. 

ஐஸ்வர்யா லெக்சுமி நடித்த படங்கள் (2022): 

ஐஸ்வர்யா லெக்சுமி நடிப்பில், புத்தம் புது காலை விடியாதோ, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் கட்டா குஸ்தி ஆகிய தமிழ் படங்கள், அர்ச்சனா 31 நாட் அவுட் மற்றும் குமாரி ஆகிய மலையாள படங்கள் மற்றும் கோட்சே, அம்மு ஆகிய தெலுங்கு படங்கள் அடங்கும். 

இதில், பொன்னியின் செல்வன்-1, வசூல் ரீதியாகவும், கார்கி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா லெக்சுமி மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற அனுபவமிக்க முன்னணி நடிகைகள் நடித்திருந்தாலும், பூங்குழலியாக வாழ்ந்திருந்தார் ஐஸ்வர்யா லெக்சுமி. தொடர்ந்து நல்லக் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக ஐஸ்வர்யா லெக்சுமி உருவெடுக்க வாய்ப்புள்ளது. 

2023ம் ஆண்டில்

இவருக்கு தற்சமயம், கிறிஸ்டோபர் மற்றும் கிங் ஆஃப் கோத்தா என்னும் மலையாள படங்களும், பொன்னியின் செல்வன்-2 தமிழ்படமும் வரும் 2023ம் ஆண்டு வெளியாக தயாராக உள்ளது. மேலும், பல இளம் இயக்குநர்களும் ஐஸ்வர்யா லெக்சுமியிடம் கதைகளை கூறி தங்கள் படங்களில் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிரது.