அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்

senthil balaji

கைதான அமைச்சர் 

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 நாட்களாக சோதனை நடத்தி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்றக்காவல் ஏற்கனவே வழங்கப்பட்டதால் மனு செல்லத்தக்கதல்ல என்றும் செந்தில் பாலாஜுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக்காவலை திரும்பப் பெறக்கோரிய மனு தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தது. 

மேலும் 2 மனுக்கள் மீது விசாரணை

அதேபோல, செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க கோருவது, காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. மேலும், செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவையும் சென்னை உயர்நீதி மன்றம் இன்று விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.