இன்று முதல் அமலுக்கு வரும் திட்டங்கள்.. மாற்றங்கள் என்னென்ன.!

website post (83)

ஏப்ரல் மாதம் நிதித்துறையில் ஒரு முக்கியமான மாதமாக பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. மத்திய மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் ஏப்ரல் மாதமே அமலுக்கு வரும். அந்தவகையில் 2023-2024-ம் நிதியாண்டில் வரவுள்ள மாற்றங்கள் என்னென்ன..பார்க்கலாம்..

* மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தபடி, புதிய வரிமுறையின்படி, ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரையிலான வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியில்லை என்ற அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

* அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான விடுமுறைக்கான பயணபடி, 3 லட்சத்திலிருந்து 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 

* பங்குச்சந்தையில் 6 சதவீத பரிவர்த்தனைக் கட்டணம் திரும்ப பெறப்பட்டுள்ளதால் பங்குகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* கடன் பத்திரங்கள் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்குக் குறுகிய கால மூலதன ஆதாய வரி அமலுக்கு வருகிறது.

* பங்குச்சந்தைகளுடன் இணைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் ஆண்டுப் பிரீமியம் 5 லட்சத்துக்கு மேல் செலுத்தினால் வரி விதிக்கப்படும். 

* மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களில், முதலீட்டு வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக அதிகரித்தது அமலுக்கு வருகிறது.

* மாத வருவாய்த் திட்டத்தில், முதலீட்டு வரம்பு 4.5 லட்சத்தில் இருந்து 9 லட்சமாக உயர்த்தப்பட்டது இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

* 6 இலக்க ஹால்மார்க் அடையாள எண் பொறிக்கப்பட்ட தங்க நகைகளை மட்டுமே விற்க இன்று முதல் அமலுக்கு வருகிறது.

* பிஎஸ்-6 தரத்தின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் விலை நாளை முதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.