இந்தியாவில் சாதி, மதம் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.. அமெரிக்காவில் பிரதமர் மோடி பேச்சு.!

kosczd fdfgbsfb5e

அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா அமெரிக்கா மரபணுவில் ஜனநாயகம் உள்ளது என்றும், இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பேசியிருக்கிறார்.  

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். 2-வது நாளான நேற்று அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் உற்சாகமாக வரவேற்றனர். 

ஒரு புதிய அத்தியாயம் பிறந்துள்ளது

சந்திப்பிற்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா- - அமெரிக்கா இடையேயான உறவுக்கு வானம் கூட எல்லை கிடையாது. அதிபர் பைடன் உடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் வாயிலாக, உலகளாவிய கூட்டு முயற்சிக்கு ஒரு புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. இது, புதிய பாதையையும், புதிய ஆற்றலையும் கொடுத்துள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின், 'ஆர்ட்டெமிஸ்' ஒப்பந்தத்தில் இணைய சம்மதம் தெரிவித்து உள்ளோம் என பேசினார். 

இந்தியாவில்  பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை

தொடர்ந்து, இந்தியா அமெரிக்கா மரபணுவில் ஜனநாயகம் உள்ளது. இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுகின். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர, ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டோம். இந்தியாவை பசுமை எரிசக்தி மையமாக மாற்ற பணியாற்றி வருகிறோம்.

பெண் கல்வி நாட்டின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்

உலகிலேயே அதிக பெண் விஞ்ஞானிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்தவர் தான் இந்திய குடியரசு தலைவராக உள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு 85 கோடி மக்களுக்கு கிடைத்து உள்ளது. அனைத்து வகையான தொழில் நுட்பங்களையும் இந்திய மக்கள் சிறப்பான முறையில் கையாண்டு வருகின்றனர். பெண்களின் கல்வி அறிவு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்.

ஒரே 'ஜி 20' நாடு, இந்தியா தான்

இந்தியாவைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைக்கு இன்றியமையாத இடம் உண்டு. இந்தியாவின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாமல், உலகின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என, பாரிஸில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய உலகின் ஒரே 'ஜி 20' நாடு, இந்தியா தான்" என்று பேசினார்.