யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு தகவல்.!

sdfg

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று இன்று ஜூலை 07 நடைபெற்றது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் யார் யாருக்கு வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்

இந்த திட்டமானது, சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஒருசில வரைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. மகளிர் உரிமைத் தொகையைப் பெற வயது வரம்புடன் ஆண்டு வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், வயது வரம்பு 21, உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமைத் தொகையானது குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஒரு கோடி பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்

தமிழக நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதல்கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் உள்ள மகளிர், சிறிய கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் இதுபோன்ற மகளிர் ஒரு கோடி பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

அரசு ஊழியர்களுக்கு கிடையாது

3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது என தகவல்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டு எந்த கடையில் உள்ளதோ அந்த கடையில் விண்ணப்பிக்க வேண்டும். பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை கிடைக்காது என தகவல்.  

சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது

அதேபோல், பெண் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது என்றும்,  ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்றும்,  சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வருமான வரி செலுத்துவோர் மற்றும் ஏற்கனவே அரசின் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்தத் திட்டத்தில் பலன் பெற முடியாது.

விண்ணப்பிக்கும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு

இந்த திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மகளிர் உரிமை தொகையைப் பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. பயனாளர்களின் ஆதார் எண் கணக்கெடுக்கப்பட்டு ஒரே பயனாளி 2 முறை பலன் அடையாமல் தடுக்கவும்  திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.