2022ம் ஆண்டில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட திரைப்படம் என்ன? 

Top Movies

2022ம் ஆண்டில் கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 படங்கள் குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இதில் பிரமாஸ்திரா: 1 - ஷிவா, கே.ஜி.எஃப் -2, தி காஷ்மீர் பைல்ஸ், ஆர்.ஆர்.ஆர். மற்றும் காந்தாரா ஆகிய திரைப்படங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது. 

அடுத்த 5 இடங்களை புஷ்பா - தி ரைஸ், விக்ரம், லால் சிங் சத்தா, திருஷ்யம் -2 (இந்தி), மற்றும் தோர்: லவ் & தண்டர் (Thor: Love & Thunder) 

பிரமாஸ்திரா திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜூனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

தென்னிந்திய படங்களின் ஆதிக்கம்

வழக்கமாக இந்திய அளவில் இந்தியில் எடுக்கப்படும் படங்களே அதிகமாகப் பேசப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு பத்து படங்களில், கே.ஜி.எஃப் -2 (கன்னடம்), ஆர்.ஆர்.ஆர். (தெலுங்கு), காந்தாரா (கன்னடம்), புஷ்பா (தெலுங்கு), விக்ரம் (தமிழ்) என ஐந்து தென்னிந்திய படங்களும், 4 இந்தி திரைப்படங்களும் ஒரு ஹாலிவுட் திரைப்படமும் அதிகம் தேடப்பட்ட படங்களில் இடம்பெற்றுள்ளது. 

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.