மீண்டும் தலைதூக்குகிறதா பசு காவலர்களின் வன்முறை? 

கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்லாமியர்களின் உடல்கள்..!

Rajasthan two muslin

ஹரியானா மாநிலத்தில் எரிந்து கருகிய காரில் இருந்து இரண்டு இஸ்லாமியர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இஸ்லாமியர்கள் கடத்தல்

கடந்த புதன் கிழமையன்று (15-02-2023) ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பஹாரி தேஷில் என்னும் கிராமத்தில் வசித்து வந்த நாசீர் (வயது 25) மற்றும் ஜூனா என அழைக்கப்படும் ஜூனா (வயது35) ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களின் உடல் ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் கடந்த வியாழன் அன்று (16-02-2023) ஒரு எரிந்த காரில் இருந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இது குறித்து அறிந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரும் காரில் இருந்த உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காரில் உள்ள சேஷிஸ் எண் மூலம் அந்த கார் யாருக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் ஜூனைத் மற்றும் நாசீரின் உடல் தானா என்பதை டி.என்.ஏ. பரிசோதனைக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் உறவினர்களோ அது கடத்தப்பட்டவர்களின் உடல்தான் என கூறியுள்ளனர்.

 

போலீசார் விசாரணை

காரில் கண்டெடுக்கப்பட்ட இருவரையும், குற்றவாளிகள் கடத்தி வந்து எரித்துக்கொன்றனரா அல்லது கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக எரித்தனாரா போன்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் கொல்லப்பட்டனரா அல்லது காரில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்தனாரா போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பஜ்ரங்தள் அமைப்பு மீது புகார்

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பசு காவலர்களே, ஜூனைத் மற்றும் நாசீரை கடத்தி கொடூரமாக கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். உறவினர்களின் புகார் அடிப்படையில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீதுய் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.