அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி  - ஜோ பைடன் அறிவிப்பு

jo biden

நமது வேலையை முடிப்போம்

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து ஜோ பைடன் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்தில் முடிய உள்ளது. இதனால் அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு வர உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதையை அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் தனது ட்விட்டர் பதிவில், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜனநாயகத்தின் பக்கம் நிற்க வேண்டிய தருணம் வரும். இது நம்முடைய அடிப்படை சுதந்திரத்திற்காக நிற்க வேண்டிய நேரம் இது என நம்புகிறேன். இதனால் தான் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறேன். என்னுடன் இணைந்திடுங்கள். நமது வேலையை முடிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மீண்டும் களத்தில் டொனால்ட் ட்ரம்ப் ?

ஏற்கனவே ஜோ பைடன் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது ஜோ பைடனே அதனை உறுதிபடுத்தியுள்ளார். கடந்த தேர்தலில் குடியரசு கட்சியில் சார்பில் அதிபர் ஜோ பைடனுக்கும் கமலா ஹாரீஸுக்கும் இடையே போட்டி நிலவிய நிலையில், கமலா ஹாரீஸ் துணை அதிபராக உள்ளார். அதேசமயம் கடந்த தேர்தலில் எதிர் தரப்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த டொனால்ட் ட்ரம்பும் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடவிருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், ஜோ பைடன் இப்பொழுதே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.