கலைக்கட்டும் ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா… ட்ரெண்டிங்கில் #என்நெஞ்சில்குடிஇருக்கும் ஹேஷ்டேக்..!

Varisu audio launch

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் #என்நெஞ்சில்குடிஇருக்கும் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

வாரிசு

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் படம் தான் ‘வாரிசு’.விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'வரசுடு' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படம் 2023 பொங்கலன்று வெளியாக உள்ளது. 

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நடிகர் விஜய், மானசி குரலில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே..' இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது. சிலம்பரசன் பாடிய ‘தீ தளபதி’ பாடலும் அமோக வரவேற்பை பெற்றது. அதன் பிறகு வெளியான ‘soulofVarisu’ பாடல் ரசிகர்களை கண்கலங்க வைத்தது என்றே சொல்லலாம். 

2 ஆண்டுகள் இடைவேளை

நடிகர் விஜய் படங்கள் வெளியானால் கண்டிப்பாக அதற்கு முன்பு அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்படும். குறிப்பாக விஜய்யின் குட்டி ஸ்டோரிக்காகவே ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடித்த படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. 

#என்நெஞ்சில்குடிஇருக்கும்

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள ‘வாரிசு ‘படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உல் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பல பிரபலங்கள் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்று காலையில் இருந்தே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்துவருகின்றனர்.  

குறிப்பாக டிவிட்டரில் #என்நெஞ்சில்குடிஇருக்கும், #VarisuAudioLaunch, ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.