சபாஷ் சரியான போட்டி.. சவால் விடுத்த பொன்முடி.. சவாலுக்கு தயாரான அண்ணாமலை.!

anna vs pon

சவாலுக்கு சவால்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணாமலை மும்மொழிக் கொள்கை பற்றி விவாதிக்க தயாரா என்று பத்திரிக்கையாளர்களிடம் அண்ணாமலைக்கு சவால் விடுத்திருந்தார். இந்தநிலையில், மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார், அமைச்சர் பொன்முடி தயாரா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறாரா அண்ணாமலை என்று கேட்டிருக்கிறார் அமைச்சர்.

இதுதான் என் விருப்பம்

என்னைப் பொறுத்தவரையில், என் மகன் படிக்கும் பள்ளியில் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இருபது வயதில், அவர் ஐந்து மொழிகள் கற்றிருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், இதே போல பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

திமுகவினரின் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறதா

உலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க, நம் குழந்தைகள் பல மொழிகள் கற்றுத் தெரிவது நலம். திமுக முதல் குடும்பத்தினரும், மற்ற திமுகவினரும் நடத்தும் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையா கடைபிடிக்கப்படுகிறது? பணமிருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

பணமில்லாத ஏழை எளிய மக்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம். மூன்று மொழிகள் என்றால் ஹிந்தி கட்டாயம் என்ற திசை திருப்பலை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் கீழ், மும்மொழிக் கற்றலில் ஹிந்தி கட்டாயம் இல்லை.

விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா?

ஆனால் தாய்மொழி கற்பது கட்டாயம். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக தாய்மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பது புதிய கல்வி கொள்கையில்தான். இதனால் உங்களால் மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா? என அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை 
சவால் விடுத்துள்ளார்.