கர்நாடக அரியணை யாருக்கு.. காங்கிரஸ் கட்சிக்குள் பனிப்போர்.. என்ன செய்யப்போகிறது மேலிடம்.!

siththa

முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்று முடிந்து அதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.  தற்போதைய 3 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 137 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 63 இடங்களிலும், மஜத 20 இடங்களிலும், இதர கட்சிகள் 04 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

காங்கிரஸுக்குள் பனிப்போர்!

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் வெற்றிக்கு 113 தொகுதிகள் தேவை என்கிற அடிப்படையில், அந்த இலக்கங்களை காங்கிரஸ் கட்சி பெற்றவுடன் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பனிப்போர் நிகழ ஆரம்பித்தது. பெரும்பான்மை தொகுதிகளில் காங்கிரஸ் பெரும்பான்மை அடைந்ததையடுத்து, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் தெரிவித்த கருத்து கர்நாடகா அரியணை யாருக்கு என்ற கேள்விக்கு விடை தேடும் ஒன்றாக பார்க்கப்பட்டது. அவர் பேசியதாவது,     

மேலிடம் முடிவுசெய்யும்

'காங்கிரஸ் வெற்றியானது, பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு எதிரான தீர்ப்பு. நான் கூறியது போல 130 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, நாங்கள் எதிர்பார்த்தது நடந்துள்ளது. பிரதமர் மோடி 20 முறைக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வென்று ராகுல் காந்தி பிரமராவார் என நம்புகிறோம் என தெரிவித்தார். இறுதியாக, முதலமைச்சர் யார் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வதன் அடிப்படையில் கட்சி மேலிடம் முடிவுசெய்யும்' என்று தெரிவித்தார். 

எனது தந்தை முதலமைச்சராக்கப்பட வேண்டும்

இதற்குமுன், சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா ஒரு முக்கியாமான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அதாவது, "பாஜக-வை ஆட்சியமைக்க விடாமல் செய்ய எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலனுக்காக எனது தந்தை முதலமைச்சராக்கப்பட வேண்டும்" என்று  தெரிவித்திருந்தார். இதையடுத்து, சித்தராமையாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டி.கே.சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். 

காங்கிரஸ் மேலிடத்திற்கு தலைவழி

சித்தராமையா மற்றும் தினேஷ் குண்டுராவ் பதவி விலகிய பின்னர் கர்நாடகாவில் காங்கிரஸை கட்டமைத்தவர் டி.கே.சிவக்குமார். சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் முழு ஆதரவு அவருக்கு இருக்கிறது என்று கூறி, முதல்வர் பதவியை விட்டுத்தரமாட்டோம் என டி.கே.சிவக்குமார் தரப்பு தெரிவிக்கின்றனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களை பாஜகவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தற்போது இந்த பிரச்சனை காங்கிரஸ் மேலிடத்திற்கு தலைவழியாக அமைந்துள்ளது.