தோல்விக்கு பழிதீர்க்குமா  பெங்களூரு ? - கொல்கத்தாவுடன் இன்று மோதல்

rcb vs kkr

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஐபிஎல் தொடர்

15 வது ஐபிஎல் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 36 வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரு அணியை கொல்கத்தா அணி இன்று எதிர் கொள்கிறது. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் சந்தித்த முதல் போட்டியில், 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்திய கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங்க மற்றும் பந்து வீச்சில் கலக்கியது. இதனால் வேறு வழியின்றி பெங்களூரு அணி கொல்கத்தாவிடம் சரணடைந்தது. 

பலம் வாய்ந்த பெங்களூரு

இதன் பிறகு பெங்களூரு மீண்டும் தன்னை நிலை நிறுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று ரன் ரேட்டை அதிகரித்தது. கடைசியாக நடந்த இரண்டு ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பெங்களூரு ஹாட்ரிக் வெற்றியை பெற முனைப்பு காட்டி வருகிறது. இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு அணி 4 ல் வெற்றியும் 3 ல் தோல்வியும் கண்டு புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. அந்த அணி பாஃப் டூ ப்ளிசிஸ், கோலி, க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் ஆட்டத்தையே அதிகம் நம்பியுள்ளது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் போட்டி நிச்சயம் பெங்களூரு கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே இந்த மூவரின் விக்கெட்டை எடுக்க கொல்கத்தா வீரர்கள் பல்வேறு யுக்திகளை கையாளக் கூடும். பேட்டிங்கில் எந்த அளவுக்கு பலம் வாய்ந்த அணியாக உள்ளதோ பந்து வீச்சில் படுமோசமாக செயல்பட்டு வருகிறது. பந்து வீச்சில் கவனம் செலுத்தினால் பெங்களூரு நிச்சயம் அசைக்க முடியாத அணியாக உருவெடுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடப்பதால் பெங்களூருக்கு சாதமாக பார்க்கப்படுகிறது. 

வெற்றிப் பாதைக்கு திரும்புமா கொல்கத்தா

கொல்கத்தா அணியை பொறுத்தவரை அந்த அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியதால் கொல்கத்தா பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. கடையாக சென்னைக்கு எதிராக நடந்த ஆட்டத்தின்போது, கொல்கத்தா கடைசி கட்டத்தில் விக்கெட்டை இழந்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யரை தவிர மற்ற வீரர்கள் சோபிக்காமல் இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல், நிலையான பேட்டிங் வரிசையும் இல்லாததும் கொல்கத்தா அணிக்கு பாதகமாக இருந்து வருகிறது. இதனால் இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.