மீண்டும் எழுச்சி பெறுமா ஹைதராபாத் ? - டெல்லியை இன்று எதிர்கொள்கிறது

srh vs dc

வெற்றிப் பாதைக்கு திரும்புமா? 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் தொடர்ச்சியான 5 தோல்விகளால் துவண்ட நிலையில், கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது. அதேசமயம், கடைசியாக நடந்த மும்பை மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தொடர் தோல்விகளை அடைந்த ஹதராபாத் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் தீவிரம் காட்டி வருகிறது. 

கடைசி இரு இடங்களில் உள்ள அணிகள் மோதல்

இன்று மோத உள்ள ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ளன. ஹைதராபாத் அணியை பொறுத்தவரை ஓரிரு வீரர்களைத் தவிர மற்றவீரர்கள் சோபிக்காதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஹைதராபாத் அணியின் வீச்சு பலமாக உள்ள நிலையில்,பேட்டிங்கில் ஹைதராபாத் அணி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. பந்துவீச்சும், பேட்டிங்கும் அந்த அணிக்கு சரியாக பொருந்தும் பட்சத்தில் ஹதராபாத் அணியை கட்டுப்படுத்துவது என்பது எதிராது சவாலாக இருக்கும். மேலும் உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. 

20 வீரர்களை பயன்படுத்திய டெல்லி அணி

அதேபோல், டெல்லி அணியும் தனது முதல் 5 ஆட்டங்களில் படுதோல்வியை சந்தித்து சோர்ந்திருந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி புதிய நம்பிக்கையை பெற்றிருக்கிறது. டெல்லி அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் மற்றும் அக்‌ஷர் படேலை தவர வேறு யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த இருவரும் தான் டெல்லி அணியின் பெரிய பலமாக கருதப்படுகிறார்கள்  நடப்பு தொடரில் இதுவரை 20 வீரர்களை டெல்லி அணி பயன்படுத்தியுள்ளது. இதனால் அந்த அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர மும்முரம் காட்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை