மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா லக்னோ..? - பஞ்சாபுடன் இன்று மோதல் 

pk vs lsg

பேட்டிங்கலில் கலக்கும் கே.எல்.ராகுல்

இன்று நடைபெற உள்ள 15 வது ஐபிஎல் தொடரின் 38 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 ல் வெற்றியும் 3 ல் தோல்வியையும் கண்டுள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி கடைசியாக குஜராத்திற்கு எதிராக நடந்த  போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த லக்னோ அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டி வருகிறது. அந்த அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் கே.எல்.ராகுல், கைமேயர் மட்டுமே சிறப்பாக விளையாடி வரும் நிலையில், மற்ற வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கடந்த முறை ஏற்பட்ட தோல்விக்கு லக்னோ அணி பழி தீர்க்க முனைப்பு காட்டி வருகிறது. மொஹாலியில் இந்த போட்டி நடப்பதால்,  பஞ்சாப் அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. 

சொந்த ஊரில் களமிறங்கும் பஞ்சாப்

பஞ்சாப் அணியை பொறுத்த வரை கடந்த போட்டியில் மும்பை அணியை  13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது. காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் களமிறங்காத கேப்டன் ஷிகர் தவான் இந்த போட்டியில் களமிறங்க உள்ளார். பஞ்சாப் அணிக்கு பலமான பேட்டிங்க் வரிசை அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. பந்து வீச்சில் பஞ்சாப் அணி கூடுதல் கவனம் செலுத்தினால் இன்றையை போட்டியில் அந்த அணியின் கை ஓங்கும்.