ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு நிலவரம்

டெபாசிட் பெற்றது அதிமுக.. டெபாசிட்டை இழந்த தேமுதிக மற்றும் நாம் தமிழர்.! 

website post (1) (52)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்தநிலையில், 27-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை 11 சுற்றுகள் முடிந்தநிலையில், 11-வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 83,126 வாக்குகள் பெற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 
அதிமுக வேட்பாளர் தென்னரசு 32,344 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பெற்றிருக்கிறார்.

நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 7,984 வாக்குகள் டெபாசிட்டை இழந்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருந்தநிலையில், நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்தபடியாக, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,115 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்திருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளருக்கு மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். 74.79 சதவீதம் வாக்குகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவாகி இருந்த நிலையில் டெபாசிட் தொகையை திரும்ப பெற சுமார் 28,000 வாக்குகளை பெற்றாக வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்தநிலையில் 11-வது சுற்றில் 32,344 வாக்குகள் பெற்றநிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட் பெற்றார். தேர்தல் பரப்புரையின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.