அனுமதியின்றி பேரணி - அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்கு

annamalai

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திமுக அரசை கண்டித்து மெழுவர்த்தி பேரணி

சென்னை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த நிலையில், சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அண்ணாமலை மீது வழக்குப் பதிவு

சென்னையில் அனுமதியின்றி மெழுகு வர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரு.நாகராஜன் தலைமையில் பேரணி நடந்தநிலையில் 3,500 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.