ஓய்ந்தது ஈரோடு கிழக்கு

ஓய்ந்தது ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பரப்புரை..

erd 1

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்கும், பரப்புரைகளுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருந்த நிலையில் தற்பொழுது ஓய்ந்துள்ளது ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்.

இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை வாகனம் மூலம் பரப்புரைமேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், காலை 9 மணிக்கு சம்பத் நகர் பகுதியில் பேசினார். அதனைத்தொடர்ந்து காந்தி சிலை, பெரிய அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்தார். முனிசிபல் காலனியில் பேசிவிட்டு,பெரியார் நகரில் பரப்புரையை நிறைவு செய்தார். அதேபோல் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்குப் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். தேமுதிக சார்பில் அக்கட்சியின் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரைகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.