இல்லத்தரசிகளுக்கு ஓர் இனிய செய்தி.! 

website post (25)

வீட்டு உபயோக சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் நிலவும் கச்சா எண்ணெய் விலை இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

சமீபகாலமாக கேஸ் சிலிண்டரின் விலை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனடிப்படையில் இந்த மாதம் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.1068-ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது 1,118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் மானியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இனிவரும் நாட்களில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு ரூ.200 மானியம் சேர்த்து வழங்கப்படும் என கூறியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் 35 லட்சம் பேருக்கு இந்த மானியம் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.