செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு.!

zdxfgc vhb

செந்தில் பாலாஜி வழக்கில் அவருடைய மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நிராகரிகத்து, விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என 3-வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.   

கபில் சிபல் வாதம்

செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று ஜூலை 14  காலை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. விசாரணையில்  இருதரப்பிலிருந்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. "சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டப்படி,  அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் இல்லை என மேகலா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தை முன்வைத்தார். அனைத்து ஆதாரத்தையும் சேகரித்த பின்பே ஆதாரத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய முடியும். 

சோதனை நடத்த, பறிமுதல் செய்ய, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப அதிகாரம் உள்ளது. அமலாக்கத்துறையின் அதிகாரம் தொடர்பாக வழக்கறிஞர் துஷார் மேத்தா முரணான வாதம் செய்துள்ளார். அமலாக்கத்துறைக்கு காவல்துறையினரின் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் துஷார் மேத்தா வாதிட்டுள்ளார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் அதற்கு மாறாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தற்போது வாதிடுகிறார்" என்று கபில் சிபல் தெரிவித்திருந்தார்.

துஷார் மேத்தா வாதம்

அதன்பிறகு, வாதிட்ட அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் "செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும்" என்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தை முன்வைத்திருந்தார். 

அதிரடி தீர்ப்பு

செந்தில் பாலாஜி மேகலா தொடர்ந்த வழக்கின் மீதான இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்தநிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் 3-வது நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், தற்போது தீர்ப்பினை வாசித்து வருகிறார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன். அவர் வாசித்த தீர்ப்பில்,  

"செந்தில் பாலாஜிக்கு 8 நாட்கள் காவல் வழங்கப்பட்டும், அமலாக்கத்துறை ஒரு நாள் கூட காவலில் எடுக்க முயற்சிக்கவில்லை. சட்டப்படி முதல் 15 நாட்களில்தான் காவலில் எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால், காவலில் எடுக்க வேண்டியது அவசியம். செந்தில் பாலாஜி உடல்நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக கருத முடியாது என நீதிபதி தெரிவித்தார். 

குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்

செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது என தெரிவித்த நீதிபதி, தாம் கைது செய்யப்பட்டதற்கான காரணம் செந்தில் பாலாஜிக்கு தெரியும் என்றும்,  கைது குறித்து செந்தில் பாலாஜிக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது என்று கூறி,  செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனச்சொல்லி, செந்தில் பாலாஜி மனைவியின் கோரிக்கையை சி.வி. நீதிபதி கார்த்திகேயன் நிராகரித்தார்.  

நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவு தான் தனது உத்தரவும் என தெரிவித்த நீதிபதி கார்த்திகேயன் செந்தில் பாலாஜி கைதும், நீதிமன்ற காவலும் சட்டப்பூர்வமானது தான் என தெரிவித்த நீதிபதி, கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும், செந்தில் பாலாஜி சட்டத்தை மதிக்க வேண்டும், விசாரணை நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.